வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (14:12 IST)

சிறுமி கொலை வழக்கு.! குற்றவாளிகள் தப்பிக்க முடியாது..! தமிழிசை..!!

tamilasai
சிறுமி கொலை வழக்கில் இருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் சிறுமியின் கொலை குறித்து அறிந்ததும் நிலைகுலைந்து விட்டதாகவும், மிகுந்த மன வேதனை தருகிறது எனவும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
சிறுமி கொலை வழக்கில் மிக தீவிரமான நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ள அவர், கொலை வழக்கிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் மனித உரிமை எல்லாம் நான் பார்க்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.