திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 6 மார்ச் 2024 (13:59 IST)

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் ராகுல் காந்தி.. அமேதி தொகுதியில் போட்டி என தகவல்..!

ragul gandhi
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அமேதி  தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராகுல் காந்தி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அமேதி  தொகுதி என்பது இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி சோனியா காந்தி ஆகியோர் போட்டியிட்ட தொகுதி என்பதால் இந்த தொகுதியில் காங்கிரஸ் பலமாக இருந்தது 
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி இந்த தொகுதியில் தான் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2019 ஆம் ஆண்டு ஸ்மிருதி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார். 
 
எனினும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதிகளிலும் அவர் போட்டியிட்டதால் அங்கு வெற்றி பெற்றதை அடுத்து அவர் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து வருகிறார் 
 
இந்த நிலையில் அமேதி  தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் ராகுல் காந்தி களமிறங்கி இருப்பதாகவும் அதுமட்டுமின்றி இந்த முறை சமாதிவாதி தான் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதால் கண்டிப்பாக அமேதி  தொகுதியில் வெற்றி பெற்று விடலாம் என்று ராகுல் காந்தி நம்புவதாகவும் தெரிகிறது 
 
இதனால் அமேதி  தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது
 
Edited by Mahendran