புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 15 ஜூன் 2019 (13:33 IST)

’இரவு முழுவதும்’ சாலையில் படுத்துறங்கிய ’முன்னாள் முதல்வர்...’

கர்நாடக மாநிலம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா  மற்றும் அவரது ஆதராவாளர்கள் உள்ளிட்ட பாஜகவினர் இரவு முழுவதும் படுத்துறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அம்மாநிலத்தில் பரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநில அரசு சந்தூர் என்ற பகுதியில்  3, 600 ஏக்கர் பரப்பளவு நிலத்தை JSW என்ற ஸ்டீல் நிறுவனத்துக்கு விற்பனை செய்யது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொண்டது.
 
இதில் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி பாஜக கட்சினர் பெங்களூரில் இரவு - பகல் தர்ணா  போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் போராட்டத்திற்கென்றே போடப்பட்டிருந்த பந்தலில் பகலில் தொடங்கிய தர்ணா போராட்டம் நேற்று இரவும் முழுவதும் நடைபெற்றது. எடியூரப்பா, அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட பாஜக கட்சியினர் இரவு நேரத்தில் அப்பந்தலிலேயே தூங்கினர். 
 
இந்தப்போராட்டல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.