கடனைச் செலுத்தாத பெண்ணுக்கு நடந்த சித்ரவதை...பரவலாகும் வீடியோ
கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள கொடிகேஹள்ளி என்ற கிராமத்தில், கந்து வட்டியைத் திருப்பிச் செலுத்தாத பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள கொடிகேஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி ((36). இந்தப் பெண் இப்பகுதியில் ஒரு ஹோட்டல் மற்றும் சிட் பண்ட் ஆகிய தொழிலும் செய்துவந்தார்.
இந்நிலையில் அவ்வூரில் உள்ள சிலரிடம் ரூ. 50000 கடன் வாங்கியுள்ளார். ஆனால் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் காலம் தாழ்த்திவந்துள்ளார்.
இதனால் அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் கோபம் அடைந்தனர்.பின்னர் ராஜமணியை மின் கம்பத்தில் கட்டிவைத்து சித்ரவதை செய்தனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அந்த வீடியோவில் அவளைச் செருப்பால், துடைப்பத்தால் அடியுங்கள் என்று திட்டுகிறார்கள்...இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்..
இந்தபகுதியில் கந்துவட்டி தொந்தரவு அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். கடனைச் செலுத்தாத பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.