ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (19:33 IST)

’தமிழிசையை ‘ கலாய்த்த ’விஜய் டிவி புகழ் நிஷா’... மன்னிப்பு கேட்டு விடியோ வெளியீடு

டிவி சேனல்களில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு சேனல் விஜய்டிவி. இதில் உள்ள முக்கிய நிகழ்ச்சி 'கலக்கப் போவது யாரு' என்பதாகும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் அறந்தாங்கி நிஷா.
சமீபத்தில் ஒரு சமீபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நிஷாவும், பழனி என்பவரும் காமெடி செய்துள்ளனர்.
 
அதில், பாஜக கட்சியை, பிரதமர் மோடி,மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து நிஷாவும், பழனியும் பலத்த விமர்சனங்களைக் கூறியதாகக் கூறப்படுகிறது.
 
இதையடுத்து பாஜகவின் தாய்க்கழகமான , ஆர்.எஸ்.எஸ் மற்றும் கடுமையான  கடுமையாக அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் பாஜக ஆதரவாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கல் தங்கள் கண்டனங்களை  நிஷாவிடம் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து தற்போது நிஷா ஒரு வீடியோவை வெளியிடுள்ளார். அதில் தாங்கள் அந்த நிகழ்ச்சியில் பேசியது தவறு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழிசை அக்காவை தான் தவறான நோக்கத்துடன் சொல்லவேண்டுமென்று நினைத்தது இல்லை. நான் பேசியது தவறு என்று அதில்  தெரிவித்துள்ளார்.