1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2018 (12:42 IST)

ஏ.ஆர்.ரஹ்மானை தேடி வந்த புதிய பதவி

ஆஸ்கார் விருது பெற்று இந்திய திரையுலகிற்கே பெருமை தேடி தந்த கோலிவுட்டின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு சிக்கிம் மாநிலத்தின் அம்பாசிடர் பதவி தேடி வந்துள்ளது.

இந்த தகவலை சிக்கிம் மாநிலம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான், 'என்னை சிக்கிம் மாநில அம்பாசிடராக தேர்வு செய்த அம்மாநில மக்களுக்கு எனது நன்றி. இந்த பதவியை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். இனி நாம் எல்லோரும் இணைந்து சிக்கிம் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்' என்று கூறியுள்ளார்.

மேலும் சிக்கிம் மாநில சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைய ஒரு பாடலையும் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்யவுள்ளதாகவும், இந்த பாடல் டூரிஸ்ட் ஆன்ந்தம் என்ற பெயரில் மிக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.