திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (13:31 IST)

நாடு முழுவதும் 6000 கி.மீ. ரயில் பாதையில் கவச் கருவியை பொருத்த திட்டம் - ரயில்வேதுறை

 railway
இந்தியாவில் 6 000 கிமீ பாதையில் கவச்  கருவியை பொருத்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

சமீபத்தில், ஒடிஷாவில் ரயில்கள்  நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில், பலநூறு பேர் பலியாகினர்.

இந்த ரயில் விபத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்று இனி விபத்துகள் எதுவும் நடக்கக்கூடாது என அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில்,    6 000 கிமீ பாதையில் கவச்  கருவியை பொருத்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

அதில், ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுக்க நாடு முழுவதும் இதுவரை 1465 கிமீ பாதைகள் மற்றும் 139 ரயில் இன் ஜின்களில் கவச் தொழில் நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், 6000 கிமீ பாதையில் கவச் கருவியை பொருத்துவது தொடர்பான ஆய்வு திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட ஆயத்த பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.