வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 டிசம்பர் 2023 (08:18 IST)

சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. இந்த வழித்தடங்களில் செல்லாது! – முக்கிய அறிவிப்பு!

Chennai electric train
சென்னையில் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. ஆனால் எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரையிலான ரயில் நிறுத்தங்கள் வழி ரயில்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மீண்டும் எழும்பூர் வரை மட்டுமே சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மார்க்கத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

அதுபோல சென்னை கடற்கரை – திருவள்ளூர், அரக்கோணம் இடையேயும், சிந்தாதிரிபேட்டை – வேளச்சேரி இடையேயும் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற கணக்கில் ரயில்கள் இயக்கப்படும். திருவொற்றியூர் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 1 மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

Edit by Prasanth.K