செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (16:17 IST)

தனது மனைவியை தடுக்க விமான பயணிகளை மிரளவைத்த நபர்.. அப்படி என்ன செய்தார்??

தனது மனைவி வெளிநாடு செல்வதை தடுப்பதற்காக, விமானப் பயணிகளை மிரளவைத்துள்ளார் ஒரு நபர்.

டெல்லியில் வசித்து வரும் நஸ்ரூதின் என்பவர், தனது மனைவி ஷாமினா வெளிநாடு செல்வதை தடுக்க நினைத்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி டெல்லி விமான நிலையத்துக்கு ஃபோன் செய்து, ஷாமினா என்ற பெண், வெடிகுண்டுடன் விமான நிலையத்தில் இருந்து துபாய் அல்லது சவுதி செல்லவுள்ளார், விமானத்தின் நடுவில் வெடிகுண்டை வெடிக்க செய்வார் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஷாபினாவை சோதனையிட்டனர். வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் போலீஸார், விமான நிலையத்திற்கு ஃபோன் செய்த நபர் யார் என விசாரணை நடத்தினர்.

அந்த விசாரனையில் ஷாபினா வெளிநாடு செல்வதை தடுப்பதற்காகவே அவரது கணவர் நஸ்ரூதின் இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளார் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நஸ்ரூதினை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் விமானிகளிடயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.