1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2018 (12:51 IST)

குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிக் கொன்ற கொடூர தாய்

டெல்லியில் பிறந்து 25 நாட்களே ஆன குழந்தையை அவரது தாய் குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி வினோத்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் நேஹா. இவருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. 
 
இந்நிலையில் வீட்டில் இருந்த குழந்தை காணாமல் போய்விட்டதாக நேஹா மற்றும் அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
 
போலீஸார் குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரிக்கவே அவர் உண்மையை கூறினார். அவர் கூறிய காரணம் போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்தது. குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், ஆத்திரமடைந்து குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியதாக தெரிவித்தார். போலீஸார் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தையை உடனடியாக மீட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.
 
இதனையடுத்து கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட குழந்தையின் தாயை போலீஸார் கைது செய்தனர். பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.