வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2018 (12:18 IST)

ரவுடி பினுவை சிறையிலேயே தீர்த்துக்கட்ட சதி? : சிறை அதிகாரிகள் உஷார்

போலீசாரிடம் சரணடைந்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவுடி பினுவை கொலை செய்ய மற்றொரு ரவுடி திட்டமிடிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, சென்னை மாங்காடு பகுதியில் கடந்த பிப். 6ம் தேதி ரவுடிகள் புடை சூழ அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது அங்கு போலீசார் சென்ற போது அவர் தப்பி சென்றாலும், பின் நெருக்கடி காரணமாக பினு போலீசாரிடம் சரணடைந்தார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
பினுவின் பரம எதிரியான ரவுடி அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனும், அவனின் கூட்டளிகளும் ஏற்கனவே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ராதாகிருஷ்ணனுன் குருவும், வட சென்னையை ஆட்டிப் படைத்த ரவுடியுமான நகேந்திரன் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். 
 
சிறைக்கு வந்துள்ள பினு தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக கருதும் ராதாகிருஷ்னன், சில ஆட்கள் மூலம் அதை நாகேந்திரனிடம் கூறியுள்ளான். இதனால், பினுவை தனது ஆட்கள் மூலம் சிறையிலேயே தீர்த்துக்கட்ட நாகேந்திரன் திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாம்.

 
மேலும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை செய்ய அனுமதி வேண்டும் என நாகேந்திரன் சிறைத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளான். அங்கிருந்தபடியே தனது ஆட்களை ஏவி பினுவை நாகேந்திரன் கொலை செய்ய திட்டமிடுவதாக போலீசார் கருதுகிறார்கள்.
 
எனவே, அலார்ட் ஆன சிறைத்துறை அதிகாரிகள் பினு, ராதாகிருஷ்ணன் மற்றும் நாகேந்திரனின் நடவடிக்கைகளை ரகசியமாக கவனித்து வருகிறார்கள் என புழல் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.