1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 18 மே 2024 (12:15 IST)

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

5 Rupees
விவசாயிகளுக்கு அரசின் வருவாய் ஆவணங்களை வழங்க 5 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம பஞ்சாயத்து கணினி ஆபரேட்டர் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஜாம்நகரில் உள்ள மோர்கண்டா கிராமத்தில் பஞ்சாயத்து போர்டு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றியவர் நவீன் சந்திரா நகும்(46). இவரிடம் அரசின் வருவாய் ஆவணங்களைக் கேட்டு விவசாயிகள் மனு செய்தனர். 
 
அவர்களிடம் ஆவணங்களை வழங்க நவீன் சந்திரா 5 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. விசிஇ படிவம், 7ஏ, 12 மற்றும் உரிமைக்கடிதம் 6 ஆகியவற்றைக் கேட்ட விவசாயிகளிடம் ஒவ்வொரு ஆவணத்திற்கும் தலா 5 ரூபாய் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று நவீன் சந்திரா கேட்டுள்ளார். இதுதொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் செய்தனர்.


இதையடுத்து விவசாயிகளிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அதிகாரிகள் கொடுத்து அனுப்பினர். பஞ்சாயத்து அலுவலகத்தில் நவீன் சந்திராவிடம் விவசாயிகள் அந்த பணத்தை லஞ்சமாக வழங்கினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், நவீன் சந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.