1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 மே 2024 (17:58 IST)

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

drugs
சென்னையில் 22 கோடி மதிப்புள்ள கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் நான்கு வெளிநாட்டவர் உள்பட ஐந்து பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் போதைப் பொருள் ஆங்காங்கே பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்பதும் இது குறித்து ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்தது. குறிப்பாக ஜாபர் சாதிக் என்ற திரை உலக பிரபலம் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் ரூ.2000 கோடி அளவுக்கு போதை பொருளை விற்பனை செய்ததாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் சென்னையில் மிகப்பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் திடீரென சோதனை செய்ததில் 22 கோடி மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருள் பறிப்புதல் செய்யப்பட்டதாகவும் இந்த போதைப் பொருளை கடத்திய ஐந்து பேரை கைது செய்ததாகவும் தகவல் வெளியானது 
 
மேலும் கைதான ஐந்து பேர்களில் நான்கு பேர் வெளிநாட்டவர் என்பதை அடுத்து அனைவரிடமும் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் 22 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran