திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (16:40 IST)

’தளபதி’ திரைப்படம் போல் ரயிலில் வந்த குழந்தை ‘’

ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தளபதி திரைப்படத்தில் வரும் முதற்காட்சியில் நடிகை ஸ்ரீவித்யா ரயிலில் தன்குழந்தையை அனுப்புவார். அதுபோல் மும்பை மின்சார ரயிலில் மோட்டார்மேன் கேபினில் ஒரு பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.போலீசார் குழந்தையை குறித்து விசாரித்து வருகின்றனர். 
மும்பை சர்ச்கேட் ரயில் நிலையத்திலிருந்து பயந்தர் செல்லும் மின்சார ரயிலில் 12.50 மணியளவில் மோட்டார்மேன் கேபினில் ஒரு பச்சிளம் குழந்தை இருப்பதாக ஒருவர் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.அவர்கள் தாதர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
 
தாதருக்கு ரயில் வந்த போது,மோட்டர்மேன் கேபினில் ஏறி சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த பையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.
 
போலீசார் சயான் ஆஸ்பத்திரியில் அந்த குழந்தையை சேர்த்தனர்.ரயிலில் குழந்தையை பையில் போட்டு இப்படி மோட்டார்மேன் கேபினில் வைத்து சென்ற ஆசாமியை வலைவீசி தேடிக்கொண்டு வருகின்றனர்.குழந்தையின் தாய் யார் என்பதையும் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.