திங்கள், 9 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:07 IST)

பொம்மை என நினைத்து பாம்பை கடித்த குழந்தை! இறந்து போன பாம்பு!

Boy bite a snake

பீகாரில் பொம்மை என நினைத்து பாம்பை ஒரு வயது குழந்தை கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள ஜாமுகர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஒரு வயது ஆண் குழந்தை மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது அப்பகுதியில் ஒரு பாம்பு சென்றுள்ளது. அதை இன்னதென அறியாத குழந்தை பொம்மை என நினைத்து பிடித்து விளையாடி கடித்துள்ளது. 

 

அப்போது அங்கு வந்த தாயார் குழந்தை பாம்பை கடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பாம்பை குழந்தையிடமிருந்து பிடுங்கி வீசினார். ஆனால் குழந்தை கடித்ததில் அந்த பாம்பு ஏற்கனவே இறந்திருந்துள்ளது. குழந்தைக்கு இதனால் ஏதும் ஆகி விடுமோ என பதறிய தாயார் உடனடியாக குழந்தையை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார்.

 

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K