1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (17:21 IST)

ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்.! மரத்திற்கு ராக்கி கட்டிய பீகார் முதல்வர்.!!

Nithish Kumar
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பீகார் முதல்வர் நிதீஷ் குமார்  மரத்தில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார்.

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமாக ரக்ஷா பந்தன் பண்டிக்கை கொண்டாடப்படுகிறது. அண்ணன்-தங்கைக்கு இடையிலான பாசப் பிணைப்பை பசைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
அதன்படி இன்று ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார்.

 
இந்நிலையில் பீகார்  முதல்வரும், ஜக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார் பாட்னாவில் உள்ள மரத்தில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இவ்வாறு அவர் செய்தார்.