புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 அக்டோபர் 2018 (14:43 IST)

கேரளாவில் மக்கள் போராட்டம் பற்றி முதலமைச்சர் பேச்சு...

சமீபத்தில் சபரிமைலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து பெண்களும்  செல்லலாம் என்று   சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள ஐயப்ப பக்தர்கள் பெண்கள் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து கடும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த போரட்டம் பற்றி கேரள முதலமைச்சர் பினராயி கூறியதாவது:
 
’நாட்டில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பது மிகச் சிலர்தான்.எனவே ஒருசிலரின் கருத்துக்களை மாநிலத்தினுடைய கருத்தாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அரசியல் சாசனம் வழங்கிய தீர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நவீன உலகில் மேற்படுகிற மாற்றத்திற்கும்ஒத்துபோவதுடன் மதச்சார்பின்மைக்கு இழுக்கு வந்து வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர்.
 
ஆனால் மதர்சார்புடைய ஆர்.எஸ்.எஸ். ,பா.ஜ.க.ஆகியவைதான் மாநிலத்தில் குழப்பம் விளைவித்து இந்த கலவரத்தையும் தூண்டுகின்றனர்.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் முழங்கி வருகின்றனர்.இவர்கள் எவ்வளவு முயற்சி செய்து கலகம் விளைவித்தாலும் கேரள அரசு சட்டத்தை கடைபித்து அதன் வழிதான் மாநிலம் செல்லும்.’இவ்வாறு அவர் கூறினார்.