புதைக்கப்பட்ட குழந்தை 8 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்பு
பிரேசிலில் உயிரிழந்துவிட்டது என நினைத்து புதைக்கப்பட்ட குழந்தை 8 மணி நேரம் கழித்து, மீண்டும் உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரேசில் கனரனாவை சேர்ந்த தம்பதியினர் ஒருவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் பெண்குழந்தை பிறந்தது. குழந்தை பேச்சு மூச்ச இல்லாமல் இருந்ததால், குழந்தை இறந்துவிட்டது என நினைத்து, அக்குழந்தை அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் அழுகுரல் கேட்டதால், அப்பகுதிவாசிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் 2 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து உயிருடன் இருந்த பெண் குழந்தையை மீட்டனர். பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.