ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 8 ஜூன் 2018 (17:39 IST)

பாட்டியானார் ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமாரின் மகள் ரெயானேவுக்கு குழந்தை பிறந்துள்ளது.
நடிகர் சரத்குமார் - ராதிகா சரத்குமார் மகள் ரெயானே - மிதுனுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம்  நடைப்பெற்றது. ரெயானே தனது காதலரான கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தில், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ரெயானேவுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் ராதிகா. இதன்மூலம் ராதிகா சரத்குமார் பாட்டியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.