வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 ஜூன் 2018 (17:03 IST)

பட்டினி போட்டு முதல் கணவரின் குழந்தையை கொன்ற மனைவி...

ஜப்பானில் பெண் ஒருவர் தனது ஐந்து வயது முதல் கணவரின் குழந்தையை பட்டினி போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஜப்பானை சேர்ந்த இளம்பெண் யூரி. இவர், வாலிபர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு யுவா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இவருக்கும் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். 
 
பின்னர், வேறு ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். முதல் கணவரின் குழந்தையையும் இவர் தன்னோடு அழைத்துச்சென்றார். 
 
நாளடைவில் அந்த குழந்தை மீது வெறுப்பு ஏற்பட்டது. 2 வது கணவருக்கும் இந்த குழந்தை மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் குழந்தையை துன்புறுத்த துவங்கியுள்ளனர். 
 
தொடர்ந்து கொடுமைப்படுத்தியதுடன் உணவும் கொடுக்காமல் பட்டினி போட்டு குழந்தையை கொன்று விட்டனர். இதன் பின்னர், தனது குழந்தை மயங்கி விழுந்துவிட்டதாகவும், மூச்சு இல்லை எனவும் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது. இதனால், கணவம் - மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.