திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (12:48 IST)

நில விவகாரம்; போராடிய பெண்களை மண்ணை போட்டு உயிருடன் புதைத்த கொடூரம்! - அதிர்ச்சி வீடியோ!

Video

மத்திய பிரதேசத்தில் நில விவகாரத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது மண்ணைக் கொட்டி உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள ஹினோட்டா ஜோராத் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் மம்தா பாண்டே, ஆஷா பாண்டே என்ற இரு பெண்கல். இவர்களுக்கும், இவர்களது உறவினர்களுக்கும் பூர்வீக நிலம் தொடர்பாக நீண்ட காலமாக தகராறு இருந்து வந்துள்ளது.

சமீபத்தில் சர்ச்சைக்குரிய அந்த நிலத்தில் சாலை அமைக்க உறவினர்கள் முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா மற்றும் ஆஷா அவர்கள் கொண்டு வந்த வாகனங்களை மறித்து நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ட்ரக்கில் இருந்த மண்ணை அந்த பெண்கள் மீது கொட்டி உயிருடன் மூடியுள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மண்ணில் புதைந்த அந்த பெண்களை உயிருடன் மீட்டுள்ளனர். நல்வாய்ப்பாக இதில் அந்த பெண்களுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K