திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 12 நவம்பர் 2022 (20:12 IST)

பவர் ஸ்டார் பவன் கல்யாண் மீது போலீஸார் வழக்குப் பதிவு!

pawan kalyan
போக்குவரத்துவிதிகளை மீறியதாக பவர் ஸ்டார் பவன் கல்யாண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சம்பவம்  நடந்த இடத்திற்கு, நவம்பர் 5 ஆம் தேதி  நேரில் சென்று பார்வையிட நடிகர் பவண் கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது அவர் காரின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டிருக்க, மேலும் பலர் காரை சுற்றி தொங்கியபடி அதிவேகத்தில் பயணித்தனர். அவரது ரசிகர்களும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ள நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த  நிலையில், ஜனசேனா கட்சித்தலைவரும்,   நடிகருமான பவன் கல்யாண் மீது போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தியதாகவும், அவர் மீது போலீஸார் 336, 279 பிரிவுகளின் கீழ் மோட்டார் வாகனச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தாக்வல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj