திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (14:56 IST)

அரசியலமைப்பை மாற்றுவோம் என பேசிய பாஜக எம்பிக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Anant-Kumar-Hegde
கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அனந்தகுமார், அர்சியலமைப்பை மாற்றுவோம் என கூறியதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அனந்தகுமார், அர்சியலமைப்பை மாற்றுவோம் என கூறியதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
 
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதற்காக பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  கார்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அனந்த்குமார், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிராக உள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என பிரதமர் மோடி கூறியது இதற்காகத்தான் என  அனந்தகுமார் ஹெக்டேட் பேசியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.