புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (20:04 IST)

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பெரிய வெடிப்பு : மக்கள் அதிர்ச்சி

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 2வது வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதில் சில இடங்களில் கனமழை பெய்துவருவதால் மரங்கள் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சரிந்துவிழுவது, சாலையில் வெள்ளம் ஓடுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் கர்நாடகாவின் பெலகாவியில் நிப்பாளி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டது.
 
இதனால் போக்குவரத்து வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் ஸ்தம்பித்து நின்றன, இதனால்  மக்களும் பெரிதும் அதிர்ச்சி அடைந்து பயணமும் பாதிக்கப்பட்டது. 
 
தற்போது பெலகாவியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவு பள்ளம் ஏற்பட்டதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட இது பரவலாகிவருகிறது.