வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 அக்டோபர் 2018 (15:45 IST)

நடிகையின் தலைக்கு ரூ. 10 கோடி அறிவித்த அரசியல் பிரமுகர் மீண்டும் பா.ஜ.க.வில்.இணைந்தார்...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும்  பத்மாவத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இது வரலாற்றை மறைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டதாக  பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அத்தனை எதிர்ப்புகளையும்  மீறி இந்தப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
அப்போது எழுந்த கண்டனக் குரல்களில் மிக முக்கியமானது பா.ஜ,க வின் மூத்த தலைவரான சுரா பால் அமு உடையதாகும். 
 
அதில் அவர் கூறியிருந்ததாவது:
 
"நடிகை தீபிகா படுகோனே மற்றும் பத்மாவத் இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலையை கொண்டு வந்து கொடுத்தால் ரூ.பத்து கோடி பரிசுத்தொகை தருவதாக அவர், அறிவித்திருந்தார்."
 
அதனைத் தொடர்ந்து அவர் பா.ஜ.க.வின் அடிப்படை உறிப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
 
இப்போது மீண்டும் அவர் பாஜ.க.வில் இணைந்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மீண்டும் ’எனது தாய் வீட்டிற்கு வந்துள்ளேன்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.