வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2024 (13:15 IST)

தொடங்கிய 2 நாட்களிலேயே 'Men Only' பேருந்து சேவை நிறுத்தம்

Telangana -Men only
தெலங்கானா மாநிலத்தில் போதிய வரவேற்பு இல்லாததால் தொடங்கிய 2   நாட்களில் Men Only என்ற பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, ஆண்களுக்கு என  Men Only என்ற சிறப்பு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. ஆனால் இதற்குப் போதிய வரவேற்புக் கிடைக்காததால், இந்தச் சேவை தொடங்கிய 2 நாட்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள் படியில் தொடங்கிக் கொண்டு செல்வதைத் தவிர்ப்பதற்காக எஸ்பி நகர் முதல் இப்ராகிம்பட்டினம் வரை இந்த பேருந்து சோதனை முறையில் இயக்கப்பட்டது. ஆனால், தனி பேருந்து சேவை இருந்தாலும், குறைந்த மாணவர்களே இதைப் பயன்படுத்திதால் இச்சேவை கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.