1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (10:22 IST)

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடி தான் 5 மாநில தேர்தல்: நாராயணசாமி

narayanasamy
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடி தான் தற்போது நடைபெற்று வரும் ஐந்து மாநில தேர்தல் என முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 
 
அவர் நேற்று தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது கடந்த ஆறு மாதங்களாக தெலுங்கானாவில் அரசியல்  சூழ்நிலை மாறிவிட்டது என்றும் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்குப் பிறகு தெலுங்கானாவில் மக்களுக்கு புதிய எழுச்சி கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
தெலுங்கானா மாநிலத்தில் பாஜகவுக்கு ஏழு முதல் ஒன்பது தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் பாஜகவின் பீ டீம் ஆகத்தான் சந்திரசேகர் ராவின் பி ஆர் எஸ் கட்சி செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். 
 
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெற்ற ஆட்சி அமைக்கும் என்றும் அதன் பின் தெலுங்கானா மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் தற்போது நடைபெற்று வரும் அனைத்து மாநில தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடி என்றும் இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது மட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி பாஜகவை வீழ்த்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran