1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 29 நவம்பர் 2023 (08:24 IST)

சந்திரசேகர ராவை தோற்கடித்துவிட்டால் மோடியை தோற்கடித்துவிடலாம்: ராகுல் காந்தி

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவை தோற்கடித்து விட்டால் டெல்லியில் மோடியை தோற்கடித்து விடலாம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
 
தெலுங்கானா மாநிலத்தில்  நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி நேற்று செய்தார். அப்போது அவர் இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது எனக்கு மிகுந்த அன்பு கிடைத்தது. நான் மோடியை எதிர்த்து போராடுவதால் என்னை மக்கள் ஆதரிக்கின்றனர். 
 
என் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நான் எனது போராட்டத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.  தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். 
 
சந்திரசேகர் ராவ் கட்சி தான் நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது.  தெலுங்கானாவில் அவருடைய ஆட்சியை அகற்றி விட்டால் மத்தியிலும் மோடி அரசு அகற்றப்படுவது எளிது என்று அவர் பேசினார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
Edited by Siva