தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் 144 தடை உத்தரவு: தெலங்கானாவில் பரபரப்பு!
தெலுங்கானா மாநிலத்தில் நேற்று மாலை ஐந்து மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 30ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 120 தொகுதிகளில் 119 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை அடுத்து கடந்த சில வாரங்களாக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்தன
இம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதாக தெரிகிறது. இரு கட்சிகளில் எந்த கட்சி வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்த நிலையில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது வெளியில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூட கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva