திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (20:10 IST)

ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமி எரித்துக் கொலை! – தெலுங்கானாவில் கொடூரம்!

தெலுங்கானாவில் வீட்டுப்பணி செய்த சிறுமியை வீட்டின் உரிமையாளர் மகன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் 13 வயது சிறுமி பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் அந்த வீட்டிலிருந்து தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிறகு தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளுக்கும் கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

உயிரிழக்கும் முன்பாக சிறுமி அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்துள்ளது. சம்பவத்தன்று வீட்டில் பணி செய்து கொண்டிருந்த சிறுமியை வீட்டின் முதலாளியின் 26 வயது மகன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமி அந்த இளைஞனை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன் சிறுமி மீது மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்தியுள்ளார்.

சிகிச்சை பலனின்றி இறந்த சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எரித்து கொன்ற முதலாளி மகன், குற்றத்திற்கு துணை புரிந்த வீட்டு முதலாளி ஆகியோரை போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.