செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (15:20 IST)

சிறுமியை கடத்தி வந்து ஒரு மாத காலமாக வன்கொடுமை! – கோழிப்பண்ணையில் நடந்த கொடூர சம்பவம்!

ஒடிசாவில் 17 வயது சிறுமியை கோழி பண்ணைக்கு கடத்தி வந்து ஒரு மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் தீர்டோலை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் சில நாட்களுக்கு முன்னதாக தன் பெற்றோரிடம் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அங்கிருந்து கட்டாக் சென்ற அவர் மீண்டும் தனது வீட்டிற்கே செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபர் அந்த சிறுமியை வீட்டில் விட்டு விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமியை கோழி பண்ணை ஒன்றிற்கு கொண்டு சென்று அடைத்து மூன்று பேர் 22 நாட்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். கோழி பண்ணையில் முறைகேடாக ஏதோ நடப்பாதாக உணர்ந்த சுற்றியுள்ள மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனால் கோழிப்பண்ணைக்கு விரைந்த காவலர்கள் சோதனை மேற்கொண்டபோது அறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டுள்ளனர். அங்கிருந்த ஒருவரை கைது செய்துள்ள காவல் துறையினர் மற்றவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.