நல்ல ஆரோக்கியத்திற்கு யோகா பண்ணுங்க! – பிரதமர் மோடி தமிழில் அட்வைஸ்!
நாளை மறுநாள் உலக யோகா தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் யோகாவின் அவசியம் குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கலைகளில் முக்கியமானதாக யோகா பயிற்சி உள்ளது. யோகா பயிற்சி உடல் மற்றும் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி “தொற்றா நோய்களும் வாழ்க்கை முறை சிக்கல்களால் ஏற்படும் உடல்நல சீர்கேடுகளும் , குறிப்பாக இளம் வயதினரிடையே பெருகி வரும் தற்காலச் சூழலில் , யோகா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சிறந்த ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.