திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 அக்டோபர் 2018 (18:17 IST)

வகுப்பறையில் குடுமிபுடி சண்டை: ஆசிரியைகள் ரகளை

கர்நாடக மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியையும், ஆசிரியையும் சண்டைப்போட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடக மாவட்டம் சுய்யா என்ற ஊரில் தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே இந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், அங்கு பணிபுரிந்து வந்த ஹிந்தி ஆசிரியைக்கும் மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
 
சம்பவ நாளான்று, வழக்கம் போல் தலைமை ஆசிரியை ரவுண்ட்ஸ் சென்றுள்ளார். அப்போது அந்த ஹிந்தி ஆசிரியை படம் நடத்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட உரையாடல் வாக்குவாதமாகி சண்டையில் முடிந்துள்ளது. 
 
ஆசிரியைகள் சண்டை போட்டுக்கொண்டதை கண்ட மாணவர்கள் பயத்தில் வகுப்பறையின் மூளை ஒளிந்துக்கொண்டனர். இதை கண்ட மேலும் சில ஆசிரியைகள் போலீஸுக்கு புகார் அளித்து பின்னர் கலைத்துவிட்டனர்.