வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 11 அக்டோபர் 2018 (16:21 IST)

பேரனை அரசியலில் இறக்கும் எண்ணம் இல்லை: தேவகவுடா!

சமீபத்தில் ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுடன் கர்நாடக மாநிலத்தில் காலியாகவுள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 
 
சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், மண்டியா பாராளுமன்ற இடைத்தேர்தலில் தேவகவுடாவின் பேரன் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்துள்ளார். 
 
மண்டியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எனது பேரனை நிறுத்த மாட்டோம். உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்தே இந்த இடைத்தேர்தலை சந்திக்கிறது. எனவே, காங்கிரசுடன் ஆலோசித்து வேட்பாளரை முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே, குமாரசாமியின் முதல் மனைவி அனிதா, தன்னை ராமநகரா தொகுதியின் வேட்பாளராக நிறுத்த கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.