திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 4 மே 2018 (12:13 IST)

சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்

ஐதராபாத்தில் சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாளுக்குநாள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 
 
இந்நிலையில் ஐதராபாத் ஆசிப் நகரில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வரும் பீகாரைச் சேர்ந்த முகமது ரேகது அன்சாரி என்ற ஆசிரியர் அங்குள்ள மாணவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவன் ஒருவர் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
 
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் ஆசிரியை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.