ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (11:23 IST)

ரயில் மீது ஏறி செல்பி… மின்சாரம் பாய்ந்து +2 மாணவன் பலி!

மதுரையில் ரயில் மீது ஏறி செல்பி எடுக்க முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வர். அங்குள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வரும் விக்னேஷ்வர் நேற்று தனது நண்பர்கள் சிலருடன் கூடல்புதூர் பகுதியில் உள்ள குட்ஷெட் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களில் ஏறிய விக்னேஷ்வர் மற்றும் நண்பர்கள் செல்பி எடுத்துள்ளனர்.

விக்னேஷ்வர் ஒரு ரயிலின் மேல் பகுதிக்கு ஏறிய போது ரயிலின் மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் உரசியதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து விக்னேஷ்வரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் விக்னேஷ்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்பி மோகத்தால் +2 மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.