டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் உயர்வு….
இந்தியாவில் மதிப்பு வாய்ந்த நிறுவனமாக மதிக்கப்படும் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் அக்டோபர் –டிசம்பர் மாதம் காலாணடு முடிவில் ஒரு பங்கு விலை 3.5 சதவீதம் உயர்ந்து பி.எஸ்.இயில் 52 வார உயர்வான ரூ.3230 ஐ தொட்டுள்ளது.
டாடா கன்சல்டன்சில் நிறுவனத்தின் பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் ரு.10 ஆயிரம் கோடி மதிப்பான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக டாடா சன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு உள்ள மொத்த பங்குகளில் 1 சதவீதத்தை விற்பனை செய்வதாக தகவல் வெளியானது. அதன்படி டிசிஎஸ் நிறுவனத்தின் 3.33 கோடிப் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
இதில் திரும்பப்பெறும் திட்டத்தின் கீழ் பங்கு ஒன்றின் விலை ரூ.3000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இப்பங்கு விற்பனை மதிப்பு ரூ.9.997 கோடியைத் திரட்டியுள்ளது.
எனவே டிசி.எஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸ் பங்கு மூலதனம் 72.16 சதவீதமகாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்தக்கட்டமாக ரூ.16000 கோடி மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.