1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 ஏப்ரல் 2026 (14:48 IST)

நாசிக் டிசிஎஸ் பெண் ஊழியர்களுக்கு பிரச்சனை.. work from home ஆர்டர் போட்ட நிர்வாகம்..!

நாசிக் டிசிஎஸ் பெண் ஊழியர்களுக்கு பிரச்சனை.. work from home ஆர்டர் போட்ட நிர்வாகம்..!
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பிபிஓ கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை மற்றும் கட்டாய மதமாற்ற புகார்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, நாசிக் கிளையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் வீட்டிலிருந்தே வேலை செய்ய  அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
 
இங்குள்ள எட்டு பெண் ஊழியர்கள் தங்களது மேலதிகாரிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் மதமாற்றத்திற்கு வற்புறுத்தியதாக கடுமையான புகார்களை அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா காவல்துறை சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. 
 
இந்த விசாரணையில், அலுவலகத்தின் மனிதவள மேலாளர் இந்த புகார்களை மூடிமறைக்க முயன்றது தெரியவந்துள்ளது. புகார்களை மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தடுத்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்களை புகாரை திரும்ப பெறுமாறு மிரட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது இந்த வழக்கில் பெண் மேலாளர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 78-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான தொலைபேசி உரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல்களை போலீஸார் மீட்டுள்ளனர். 
 
இதற்கிடையில், தேசியப் பெண்கள் ஆணையமும் ஒரு விசாரணை குழுவை அமைத்துள்ளது. டாடா குழுமம் இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு, குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
 
Edited by Siva