1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 ஜனவரி 2025 (16:02 IST)

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

சென்னையில் புத்தாண்டு தினத்தில் பைக் பந்தயத்தில் ஈடுபட்ட 242 பேர்களின் பைக்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

புத்தாண்டு ஒட்டி சென்னையில் சட்டவிரோதமாக ஒவ்வொரு ஆண்டும் பைக் பந்தயங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பந்தயங்கள் நடத்தக்கூடாது என ஏற்கனவே காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தில் கூடுதல் பாதுகாப்பிற்காக 19000 போலீசார் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் பந்தயத்தில் ஈடுபட்டதாக 242 பைக்குகளை பறிமுதல் செய்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளை அபராதம் விதிக்காமல் உரியவர்களிடம் எச்சரிக்கை செய்து ஒப்படைக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் மீண்டும் பைக் பந்தயத்தில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்


Edited by Mahendran