வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஜனவரி 2021 (17:33 IST)

2 வயது குழந்தை வன்கொடுமை; 29 நாட்களில் தூக்கு தண்டனை! – உத்தரபிரதேசத்தில் அதிரடி!

உத்தரபிரதேசத்தில் குழந்தை வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 29 நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் காவி நகர் பகுதியை சேர்ந்த ஒருவரின் 2 வயது பெண் குழந்தை கடந்த அக்டோபரில் காணாமல் போனது. இதுதொடர்பாக போலீஸார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தையின் தந்தையின் நன்பரான சந்தன் என்பவரையும் போலீஸார் விசாரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தை டிசம்பர் மாதத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்த நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சந்தன் தான் குழந்தையை வன்கொடுமை செய்து கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பான வழக்கின் மீதான குற்றப்பத்திரிக்கை டிசம்பர் 29 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் உடனடியாக குற்றம் விசாரிக்கப்பட்டு சந்தனுக்கு உத்தர பிரதேச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.