டிராக்டர் பேரணிக்கு தயாராகும் விவசாயிகள்!

Sugapriya Prakash| Last Modified சனி, 23 ஜனவரி 2021 (12:06 IST)
டெல்லியை இணைக்கும் ரிங்ரோடு புறவழி சாலையில் டிராக்டர் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 
 
வேளாண் சட்டங்களை பின்வாங்க வேண்டும் என விவசாயிகள் போரடி வரும் நிலையில், டிராக்டர் பேரணியை மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்று விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பஞ்சாப், அரியான, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து டிராக்டர்கள் டெல்லிக்கு கொண்டு வரப்படுகின்றன.
 
இதுவரை சுமார் 10,000 டிராக்டர்கள் டெல்லி அருகே நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்று டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேச மாநில போலீசார் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :