மீண்டும் டாடாவின் கைகளில் சேருமா ஏர் இந்தியா? – டாடா நிறுவனம் ஆலோசனை!

tata
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 5 நவம்பர் 2019 (15:02 IST)
ஏர் இந்தியா நிறுவனத்தை அரசு விற்க இருக்கும் நிலையில் மீண்டும் அதை டாடா நிறுவனமே வாங்கி கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1932ம் ஆண்டு ஜேஆர்டி டாடாவால் தொடங்கப்பட்டது டாடா ஏர் சர்வீசஸ் நிறுவனம். சுதந்திரத்துக்கு பிறகு மத்திய அரசு கைகளுக்கு சென்ற இந்நிறுவனம் ஏர் இந்தியாவாக மாற்றம் கண்டது. தற்போது ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருப்பதால் அரசு அதை விற்க ஆர்வம் காட்டி வருகிறது. ஏர் இந்தியாவை மீண்டும் டாடா நிறுவனம் வாங்கி கொள்ள திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன் “ஏர் இந்தியாவை வாங்குவது குறித்து டாடா சன்ஸ் முடிவெடுக்க முடியாது. விஸ்தாராதான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். என்னால் எதையும் தீர்மானமாக சொல்ல முடியாது. தற்போது ஏர் இந்தியாவை வாங்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். அதற்கு பிறகே முடிவெடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

டாடா நிறுவனங்களை உருவாக்கிய ஜேஆர்பி டாடாவின் முதன்மை நிறுவனமாக இருந்த ஏர்வேஸை மீண்டும் டாடா வாங்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :