வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (13:25 IST)

இந்தியாவில்தான் அதிகம் வீடியோ பார்க்கிறார்கள்! – அதிர்ச்சியளிக்கும் சர்வே!

ஆன்லைனில் வீடியோ அதிகம் பார்க்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.

தனியார் நிறுவனம் ஒன்று 2019ம் ஆண்டில் அதிகம் வீடியோக்களை பார்க்கும் நாடுகள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை தொடங்கியது. அதில் இந்தியர்கள் வாரத்துக்கு  8 மணிநேரம் 30 நிமிடங்கள் வரை சராசரியாக ஆன்லைன் வீடியோக்களை பார்க்க செலவிடுகிறார்கள் என தெரிய வந்துள்ளதாம்.

சர்வதேச அளவில் வாரத்தில் அதிகளவு வீடியோ பார்த்ததாக இதுவரை பதிவான 6 மணிநேரம் 48 நிமிடங்களை விட இது அதிகமானதாகும். இந்தியாவில் வளர்ச்சியடைந்துள்ள தகவல் தொடர்பு துறைகளால் இணைய வசதி மிகவும் குறைவான விலையில் கிடைப்பதால் மக்கள் நாள்தோறும் அதிகமான வீடியோக்களை பார்ப்பதாக கூறப்படுகிறது.

மேலும் யூட்யூப், நெட்பிளிக்ஸ் போன்ற இலவச மற்றும் குறைந்த விலை சேவைகளால் மக்கள் பயணங்களில், வீடுகளில் இருக்கும்போதும் கூட ஆன்லைன் வீடியோக்களை அதிகம் பார்க்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் “இந்தியாவில் அதிகளவு வீடியோக்கள் பார்க்கப்படுவது தொழில்நுட்பத்தில் நாம் வளர்ந்திருப்பதை காட்டினாலும், நமக்கு கெடுதல் விடுவிக்கும் ஒன்றாகவும் பார்க்க வேண்டியுள்ளது. தேவையற்று எந்நேரமும் வீடியோக்கள் பார்த்து கொண்டே இருக்கும் பழக்கம் இளைஞர்களிடையே பரவி வருகிறது” என்று கூறியுள்ளனர்.