செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (10:17 IST)

இங்கிலாந்து தொடர் முழுவதும் ஜடேஜா விலகல்! இந்திய அணிக்கு பின்னடைவு!

சிட்னி டெஸ்ட்டில் காயமான ரவிந்தர ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது நான்கு போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் ஜடேஜா 4 விக்கெட்களை வீழ்த்தி கலக்கினார். ஆனால் பேட்டிங் செய்யும் போது அவர் கைவிரலில் பட்டு காயமடைந்தார். இதனால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசவில்லை. மேலும் நான்காவது போட்டியில் இருந்தும் விலகினார்.

இதனால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இப்போது அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் அவரின் காயம் ஆற இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதுமே அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.