வியாழன், 7 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஜூன் 2024 (13:03 IST)

பள்ளி பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னா பாடம்.. அதிர்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள்..!

பள்ளி பாட புத்தகத்தில் தேச தலைவர்கள், சாதனை செய்தவர்களின் பாடங்கள் மட்டுமே வைக்கப்படும் நிலையில் நடிகை தமன்னாவின் பாடம் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமன்னா குறித்த பாடம் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஏழாம் வகுப்பு புத்தகத்தில் சிந்து பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை என்ற பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமன்னாவை பற்றி எங்கள் குழந்தைகள் ஏன் படிக்க வேண்டும் என்றும் தமன்னாவை படித்து என்ன பயன் என்றும் இந்த பாடத்திற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பாடம் எப்படி வந்தது என்பது ஆசிரியர்களுக்கே புரியாமல் இருக்கும் நிலையில் இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படையில் கர்நாடக மாநில கல்வி அதிகாரிகள் விசாரணை செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

இதனை அடுத்து தமன்னாவின் பாடம் பாடப்புத்தகத்தில் ஏன் வந்தது என்பது குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva