1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (13:16 IST)

தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து பகிரவும்.! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை..!!

Modi
தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர வேண்டுமென்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது.  அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில், தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர வேண்டுமென்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தன்னுடைய எக்ஸ் முகப்பு பக்கத்தில் தனது படத்தை நீக்கிவிட்டு தேசியக் கொடியை வைத்த பிரதமர் மோடி,  இதுகுறித்து வெளியிட்டுள்ளப் பதிவில், “இந்தாண்டு சுதந்திரதினம் நெருங்கி வருவதால், மீண்டும் ஹர் கர் திரங்கா மறக்கமுடியாத மக்களுக்கான இயக்கமாக மாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
நான் எனது சுயவிவரப் படத்தை மாற்றுகிறேன் என்றும் இதன்மூலம் நமது மூவர்ணக் கொடியைக் கொண்டாடுவதில் என்னுடன் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் ஆம், உங்கள் தற்படங்களை(செல்ஃபி) https://harghartiranga.com இல் பகிர வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.