வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (14:45 IST)

அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சுரேஷ் கோபி..!

Suresh Gopi
திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று அழுத்தம் கொடுத்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன் என சுரேஷ் கோபி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் வெற்றி பெற்ற ஒரே பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி என்பதும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட மறுநாளே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் கேரள திரைப்பட வர்த்தக சபையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிப்பதால் தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை என்று பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா என்பது என்னுடைய பேஷன், சினிமா இல்லை என்றால் நான் இறந்து விடுவேன், 22 படங்களை முடிக்க வேண்டியது உள்ளது என்று அமித்ஷாவிடம் கூறியபோது அந்த பேப்பரை அவர் தூக்கி வீசினார்.

மீண்டும் திருச்சூர் மக்களுக்கு நன்றி செலுத்தவே அமைச்சர் பொறுப்பை ஏற்றேன். நான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வேண்டுமானால் நான்கு அதிகாரிகள் என்னுடன் இருக்க வேண்டும், அதற்கான செலவை தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும், படங்களில் நடிக்க கூடாது என யாராவது அழுத்தம் கொடுத்தால் உடனே அமைச்சர் பதவியில் இருந்து விலக தயாராக இருக்கிறேன்’ என்று கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva