வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2017 (10:23 IST)

தேசிய கீதத்திற்கு எழுந்து நிக்க வேண்டிய அவசியமில்லை: உச்சநீதிமன்றம் சர்ச்சை உத்தரவு!!

தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்றுதான் தங்களது தேச பற்றை நிருபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளது. 


 
 
திரையரங்குகளில் படம் திரையிடப்படும் முன் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அதே சமயம் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
 
ஆனால், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தேசிய கீதம் விவகாரம் தொடர்பான உத்தரவை மறு பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. எழுந்து நிற்கவில்லை என்றால் தேசபக்தி இல்லை என்று அர்த்தமில்லை.
 
தேசிய கீதம் தொடர்ந்து வாசிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பதை விரைவில் அரசு முடிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.