செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2017 (05:37 IST)

தியேட்டர்களில் தேசிய கீதம் போல் இதுவும் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தேசியகீதம் திரையிடப்பட வேண்டும் என்றும், அப்போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.



 
 
இதனையடுத்து தற்போது மத்திய அரசின் ஆவணப்படம் ஒன்றையும் கண்டிப்பாக திரையிட வேண்டும் என்று மத்திய அரசு திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
இந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆவணப்படம் ஒன்றை மத்திய அரசு தயாரித்து வருகிறது
 
இந்த திரைப்படத்தை அனைத்து திரையரங்குகளில் திரையிட வேண்டும் என்றும், முதல்கட்டமாக இந்த நடைமுறை டெல்லியில் தொடங்கப்பட்டு பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை திரையிடாத திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.