ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஏப்ரல் 2018 (12:45 IST)

சி.பி.எஸ்.இ வினாத்தாள் வழக்கு தள்ளுபடி!

சி.பி.எஸ்.இ வினாத்தாள் வெளியானது தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த 26-ந்தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வின் வினாத்தாளும் 28-ந்தேதி 10-ம் வகுப்பு கணிததேர்வின் வினாத்தாளும் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனதாக கூறப்பட்டது.
 
இதனையடுத்து, சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு பொருளியல் பாடத்திற்கான மறு தேர்வு ஏப்ரல் 25 -ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 10-ம் வகுப்பு கணித பாடத்திற்கான மறுதேர்வு இல்லை என்று அறிவித்தது.
 
இந்நிலையில், சி.பி.எஸ்.இ வினாத்தாள் வெளியானது குறித்து தொடரப்பட்ட வழக்குகள் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மறுதேர்வு தொடர்பாக நீதிமன்றம் தலையிடாது என்றும் தெரிவித்துள்ளனர்.